புதுடெல்லி: தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு கடந்த 1967ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா, வியட்நாம், லாவோஸ், கம்போடியா மற்றும் புருனே ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. லாவோஸ் தற்போது ஆசியான் அமைப்பின் தலைவராக உள்ளது. 21வது ஆசியா – இந்தியா உச்சி மாநாடு மற்றும் 19வது கிழக்காசியா உச்சி மாநாடு ஆகியவை இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
இந்த மாநாடுகளில் கலந்து கொள்ள வருமாறு பிரதமர் மோடிக்கு லாவோஸ் பிரதமர் சோனேக்சோ சியான்டோன் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இன்று லாவோஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து வௌியுறவுத்துறை செயலாளர் ஜெய்தீப் மஜூம்தார் கூறியதாவது, “லாவோஸ் பிரதமரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக இன்று லாவோஸ் செல்கிறார். இருநாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார்” என தெரிவித்துள்ளார்.
The post பிரதமர் மோடி இன்று லாவோஸ் பயணம் appeared first on Dinakaran.