புதுடெல்லி,
2025-26 ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த வகையில், பிரதமரைப் பாதுகாக்கும் பணியை மேற்கொள்ளும் எஸ்பிஜி எனப்படும் சிறப்புப் பாதுகாப்புப் படைக்கு ரூ.489 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது, கடந்த ஆண்டைவிட சுமார் ரூ.22 கோடி குறைவு ஆகும்.
இதன்படி பார்த்தால் பிரதமரின் பாதுகாப்பிற்கு ஒரு நாளுக்கு ரூ.1.34 கோடி செலவிடப்படுகிறது. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு மணி நேரத்திற்கு ரூ.5.58 லட்சமும், ஒரு நிமிடத்திற்கு ரூ. 9,303-ம் செலவிடப்படுகிறது. அதேபோல, ராணுவத்துக்கு ரூ.6 லட்சத்து 81 ஆயிரத்து 210 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.