
புதுடெல்லி,
டெல்லி முன்னாள் முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் இன்று நடைபெற்ற 'ஜந்தா கி அதாலத்' என்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் இரட்டை இன்ஜின் அரசுகள் தோல்வியடைந்து வருகின்றன. இரட்டை இன்ஜின் என்பது இரட்டை கொள்ளை மற்றும் இரட்டை ஊழலாக மாறிவிட்டது. பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள டெல்லி சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, பா.ஜ.க. ஆட்சி செய்யும் 22 மாநிலங்களில் பிரதமர் மோடி இலவச மின்சாரம் வழங்கிவிட்டார் என்றால் நான் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன்."
இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.