சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் பிரதமர் மோடியை சந்திக்க பிரதமர் அலுவலகம் அனுமதி கொடுக்கவில்லை என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கூறினார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை நேற்றிரவு அளித்த பேட்டி: பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட பாம்பன் புதிய பாலம் பழுது ஆனதாக, மதுரையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
அது குறித்து ஒன்றிய அமைச்சரிடம் கேட்டபோது, அப்படி எதுவும் பழுதாகவில்லை என்று கூறினார். தூக்குப்பாலம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றால், ரயில் கடந்து சென்ற பிறகு, பாலம் மேலே செல்கிறது. ரயில் முழுவதுமாக கடைசி பெட்டி வரை கடந்து சென்ற பிறகுதான், மறுபடியும் அதை இயக்க முடியும் . அப்படிதான் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே பாலத்தில் எந்த பிரச்சனையும் இல்லை.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார்களா என கேட்கிறீர்கள். அது யூகத்தின் அடிப்படையில் வெளியான தகவல் தான். அப்படி எந்த அனுமதியும் கேட்கப்படவில்லை. அவர்களுக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து அனுமதியும் கொடுக்கப்படவில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
* பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட பாம்பன் புதிய பாலத்தில் பழுது ஏற்படவில்லை… பாலத்தில் எந்த பிரச்னையும் இல்லை…
The post பிரதமரை சந்திக்க இபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.