பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் இந்த ஆண்டு 68,569 வீடுகள் கட்ட இலக்கு: முதல் தவணையாக ரூ.209.20 கோடி ஒதுக்கியது தமிழக அரசு

4 weeks ago 13

சென்னை: தமிழக கிராமப்புறங்களில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் இந்த ஆண்டுக்கு 68,569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் தவணையாக ரூ.209.20 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்ட அரசாணையின் விவரம்: கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய ஊரக வளர்ச்சித்துறை, கிராமப்புற பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதாவது 2029-ம் ஆண்டு வரை, கூடுதலாக 2 கோடி புதிய வீடுகள் கட்ட ஒப்புதல் அளித்தது. இதில், இந்த 2024-25ம் நிதியாண்டுக்கு தமிழகத்தில் 68,569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article