பிரசவத்தின்போது தாய்மார்களின் இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் அதிகரித்ததாக வதந்தி : தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம்

5 hours ago 2

சென்னை : பிரசவத்தின்போது தாய்மார்களின் இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் அதிகரித்ததாக வதந்தி பரப்பப்படுவதாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பின்வருமாறு..

வதந்தி

‘கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தாய்மார்களின் இறப்பு விகிதம்(MMR) அதிகரித்துள்ளது’ என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?

இது முற்றிலும் பொய்யான தகவல். கடந்த 2001ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பிரசவத்தின் போது ஒரு லட்சம் பேரில் 134 ஆக இருந்த தாய்மார்களின் இறப்பு விகிதம்(MMR) கடந்த 2018-20ல் 54 ஆகக் குறைந்து தற்போது 2023-24ல் 45.5 ஆக குறைந்தே இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் தாய்மார்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகப் பொய்யான தகவல் பரப்பப்படுகிறது.

The post பிரசவத்தின்போது தாய்மார்களின் இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் அதிகரித்ததாக வதந்தி : தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் appeared first on Dinakaran.

Read Entire Article