பிப்ரவரி மாத வாகன விற்பனை

2 hours ago 2

கடந்த பிப்ரவரி மாதத்துக்கான வாகன விற்பனை விவரங்களை ஆட்டோமொபைல் டீலர்கள் சங்க கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இவை, நிறுவனங்களில் இருந்து டீலர்களுக்கு அனுப்பப்பட்ட மொத்த வாகன விற்பனை விவரமாகும். இதில், ஹூண்டாய் நிறுவனம் அதிகபட்சமாக 38,156 கார்களை விற்பனை செய்து, 12.58 சதவீத சந்தை பங்களிப்பை தக்க வைத்துள்ளது. மாருதி சுசூகி நிறுவனம் நிறுவனம் கடந்த பிப்ரவரியில் 1,18,149 கார்களை விற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு 38.94 சதவீதமாக அதிகரித்துள்ளது. சுசூகி பிரான்க்ஸ் 21,461 எண்ணிக்கையுடன் இந்த நிறுவனத்தின் முன்னணி விற்பனை காராக திகழ்கிறது.

மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் 39,889 கார்களை விற்றுள்ளது. இதன் சந்தைப் பங்களிப்பு 13.15 சதவீதம். இதுபோல் டாடா மோட்டார்ஸ் 38.696 கார்களையும் (சந்தைப் பங்களிப்பு 12.75 சதவீதம்) விற்பனை செய்துள்ளன. டூவீலர்களை பொறுத்தவரை ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் 3,85,988 டூவீலர்களை விற்றுள்ளன. இதன் சந்தைப் பங்களிப்பு 28.52 சதவீதம். அடுத்ததாக ஹோண்டா நிறுவனம் 3,85,988 (சந்தைப் பங்களிப்பு 24.27%), டிவிஎஸ் மோட்டார் 2,53,499 (18.73%) டூவீலர்களை விற்றுள்ளது.

1,378 ஆர்டிஓ அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட வாகன பதிவு புள்ளி விவரங்கள் அடிப்படையில் ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கக் கூட்டமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சில நிறுவனங்களின் வாகனங்கள் விற்பனை உயர்ந்திருந்தாலும், ஒட்டு மொத்த அளவில் கடந்த பிப்ரவரியில் வாகன விற்பனை 7 சதவீதம் சரிந்துள்ளது. அதாவது கடந்த மாதம் மொத்தம் 18.9 லட்சம் வாகனங்கள் விற்றுள்ளன. முந்தைய ஆண்டு இதே மாதத்தில் 20.5 லட்சம் வாகனங்கள் விற்பனையாகின. பயணிகள் வாகன விற்பனை அதிகபட்சமாக 10 சதவீதம் சரிந்து, 3 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இதுபோல் டூவீலர்கள் விற்பனை 6 சதவீதம் சரிந்து 13.5 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன என சங்க தலைவர் சி.எஸ்.விக்னேஷ்வர் தெரிவித்துள்ளார்.

The post பிப்ரவரி மாத வாகன விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article