தலைமைச் செயலக குடியிருப்பு பகுதியில் குடும்ப தகராறு காரணமாக தந்தையை கட்டையால் தாக்கிய மகன் கைது

3 hours ago 2

சென்னை: சென்னை, புரசைவாக்கம், எஸ்.எஸ் புரம் 1வது தெருவில் ராதாகிருஷ்ணன், வ/64, த/பெ.பலராமன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது மகன் சரத்குமார் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் சரத்குமாரின் மனைவி கனிஷ்மா என்பவர் தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் கனிஷ்மா மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோர் சேர்ந்து மேற்படி ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து கடந்த 15.03.2025 அன்று இரவு பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சரத்குமார், தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியே போக கூறியுள்ளார். அப்போது இராதாகிருஷ்ணனுக்கும் அவரது மகன் சரத்குமாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றிய நிலையில் சரத்குமார், தனது தந்தை ராதாகிருஷ்ணனை தகாத வார்த்தைகள் பேசி, கையாலும், கட்டையாலும் தாக்கியுள்ளார். காயமடைந்த ராதாகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேற்படி சம்பவம் குறித்து, G-5 தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

G-5 தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சரத்குமார், வ/32, த/பெ.ராதாகிருஷ்ணன், எஸ்.எஸ் புரம் 1வது தெரு, புரசைவாக்கம், சென்னை என்பவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட எதிரி சரத்குமார் விசாரணைக்குப் பின்னர் நேற்று (16.03.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

The post தலைமைச் செயலக குடியிருப்பு பகுதியில் குடும்ப தகராறு காரணமாக தந்தையை கட்டையால் தாக்கிய மகன் கைது appeared first on Dinakaran.

Read Entire Article