புதுடெல்லி: முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ‘சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்’ பிப்.22ம் தேதி தொடங்குகிறது. இந்தியா உட்பட 6 நாடுகள் பங்கேற்கும் இந்தப்போட்டியில் இந்திய அணிக்காக அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் விளையாட உள்ளார். இது குறித்து யுவராஜ் சிங் நேற்று கூறுகையில், ‘சச்சின் டென்டுல்கர் உள்ளிட்ட இந்திய வீரர்களுடன் மீண்டும் களமிறங்க உள்ளேன். பெருமைக்குரிய அந்த நாட்களை மீட்டெடுப்பதை போல் உணருகிறேன்’ என்றார்.
The post பிப்ரவரி 22ம் தேதி சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் appeared first on Dinakaran.