பிப்.20 முதல் எந்த நேரத்திலும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும்: அண்ணா தொழிற்சங்கம்

2 hours ago 1

சென்னை: பிப்.20 முதல் எந்த நேரத்​தி​லும் போக்கு​வரத்து தொழிலா​ளர்​களின் வேலைநிறுத்தம் நடைபெறும் என அண்ணா தொழிற்​சங்கம் அறிவித்​துள்ளது. சென்னை​யில் நேற்று அண்ணா தொழிற்​சங்​கத்​தின் தலைமை​யின் கீழ் செயல்​படும் கூட்​டமைப்பு சங்கங்​களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்​றது. இதில் தேமு​திக, புரட்சி பாரதம் உள்ளிட்ட 22 சங்கங்களை சேர்ந்த நிர்​வாகிகள் பங்கேற்​றனர்.

பின்னர் செய்தி​யாளர்​களிடம் அண்ணா தொழிற்​சங்க பேரவைச் செயலாளர் ஆர்.கமல​கண்ணன் கூறிய​தாவது: வரும் 5-ம் தேதி போக்கு​வரத்து செயலரை சந்தித்து வேலைநிறுத்த நோட்​டீஸை வழங்​க​விருக்​கிறோம். இதையடுத்து 20-ம் தேதி முதல் எந்த நேரத்​தி​லும் வேலைநிறுத்தம் நடைபெறும். தொமுசவை தவிர்த்து அனைத்து சங்கங்​களை​யும் ஒருங்​கிணைத்து போராட்​டத்தை முன்னெடுக்​க​ உள்​ளோம்.

Read Entire Article