பந்தலூர், ஏப்.17 : பந்தலூர் அருகே பிதர்காடு பஜார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். யானை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதால் பொதுமக்கள், வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சந்தகுன்னு மற்றும் பிதர்காடு பெட்ரோல் பங்க் முதல் முக்கட்டி வரை தெரு விளக்குகள் முறையாக எரியாமல் இருப்பதாகவும் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். எனவே பிதர்காடு பகுதியில் உள்ள குறைந்த மின்னழுத்த குறைபாடுகளை விரைந்து மின் வாரிய நிர்வாகம் சீரமைக்க வேண்டும். தெரு விளக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பிதர்காடு பகுதியில் ஏற்படும் குறைந்த மின்னழுத்தத்தால் பொதுமக்கள் கடும் பாதிப்பு appeared first on Dinakaran.