பிணைத் தொகை இல்லாததால் ஜாமீன் பெற முடியாத கைதிகள் எத்தனை பேர்?: உச்ச நீதிமன்றம் கேள்வி

1 month ago 4

புதுடெல்லி: பிணைத் தொகை இல்லாத காரணத்தால், தகுதி இருந்தும் ஜாமீன் பெற முடியாத நிலையில் எத்தனை பேர் சிறையில் உள்ளனர் என்கிற தகவலை இ-சிறை இணையதளத்தில் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. ஜாமீன் வழங்குவதில் கொள்கை வியூகம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதில், இ-சிறை இணையதளம் தொடர்பான பிரச்னைகள் குறித்து நீதிபதிகள் விசாரிக்கையில், ‘‘பிணைத் தொகை கட்ட முடியாததால், ஜாமீன் கிடைத்தும் சிறையில் இருக்கும் கைதிகளின் பிரச்னைகளை நாம் பரிசீலித்திருக்கிறோமா? தயவுசெய்து அதையும் பாருங்கள். இந்த தகவல்களும் இ-சிறை இணையதளத்தில் கிடைக்கும்படி செய்யுங்கள்’’ என பரிந்துரைத்தனர். இ-சிறை இணையதளத்தில் நாடு முழுவதும் உள்ள 1,292 சிறைகள் மற்றும் 1.88 கோடி கைதிகளின் விவரங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

The post பிணைத் தொகை இல்லாததால் ஜாமீன் பெற முடியாத கைதிகள் எத்தனை பேர்?: உச்ச நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article