மும்பை: உலகின் மிக பிரசித்தி பெற்ற டி20 தொடர் என்றால் அது ஐபிஎல் தான். ஐபிஎல் தொடர் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் பிசிசிஐக்கு வருமானம் தருகிறது. இந்த சூழலில் பிசிசிஐ க்கு போட்டியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முதன்முறையாக பிஎஸ்எல் தொடரை ஐபிஎல் போட்டி நடைபெறும் அதே நேரத்தில் நடத்துகிறது.இதன் மூலம் ஐபிஎல்-க்கு போட்டியாக தங்களது தொடரை மாற்றலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்திருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் தேர்வாகாத பல வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் தேர்வு செய்யப்பட்டனர்.
ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி முதல் மே 25 வரை நடைபெற உள்ள நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் ஆட்டம் ஏப். 11 முதல் மே 18 வரை நடைபெறுகிறது. தென்ஆப்ரிக்க ஆல்ரவுண்டரான 30 வயது கார்பீன் போசை பெஷாவர் ஏலம் எடுத்திருநத்து. இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த தென்ஆப்ரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் லீசாத் வில்லியம்ஸ் காயம் காரணமாக ஐபிஎல்லில் இருந்து விலகினார்.
இதையடுத்து அவருக்கு பதிலாக பிஎஸ்எல் தொடரில் தேர்வாகி இருந்த கார்பீனை மும்பை இந்தியன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் வழங்கும் பணத்தில் 10 சதவீதம் கூட பிஎஸ்எல் தொடரில் கிடைக்காது என்பதால் ஐபிஎல்லில் ஆட உள்ளார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோபம் அடைந்துள்ளது. இது தொடர்பாக கார்பீனுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
The post பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகி மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த தெ.ஆ. வீரருக்கு பிசிபி நோட்டீஸ் appeared first on Dinakaran.