பி.சி.சி.ஐ.-ன் ஒப்பந்தத்தில் மீண்டும் இடம்பெறும் ஸ்ரேயாஸ் ஐயர்..? வெளியான தகவல்

1 month ago 7

மும்பை,

இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ., நடப்பாண்டிற்கான வீரர்களின் புதிய ஊதிய ஒப்பந்த பட்டியலை விரைவில் அறிவிக்க உள்ளது. அண்மையில் வீராங்கனைகளின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலை பி.சி.சி.ஐ. அறிவித்து விட்டது.

இதனால் விரைவில் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இதனை முடிவு செய்யும் விதமாக பி.சி.சி.ஐ. ஆலோசனை கூட்டம் கவுகாத்தியில் நாளை நடைபெறுகிறது. இதில் செயலாளர் தேவஜித் சைகியா, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தேர்வு குழு தலைவர் அகர்கர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார்கள்.

இதில் கடந்த ஆண்டு உள்ளூர் போட்டியில் விளையாட மறுத்ததால் ஒப்பந்தத்தில் இருந்து கழற்றி விடப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் முடிவடைந்த சாம்பியன்ஸ் டிராபியில் அசத்தியதால் அவருக்கு பி.சி.சி.ஐ. மீண்டும் வாய்ப்பு வழங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Read Entire Article