சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கை:சுங்கக் கட்டணம் செலுத்தும் பாஸ் டேக் முறையில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகள் இரட்டை பகற்கொள்ளை அறிவிப்பாக உள்ளது. சுங்கச்சாவடிக்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே பாஸ்டேக் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றும், சுங்கச்சாவடிக்கு போகும் வழியில் அல்லது சுங்கச்சாவடிக்கு அருகே ரீசார்ஜ் செய்தாலோ அது ஏற்றுக்கொள்ளப்படாது எனவும், அதற்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் விதிகள் மாற்றப்பட்டுள்ளன.
இந்த விதிகள் மிகவும் மோசமானவை. இந்த விதிகள், வாகன உரிமையாளர்களிடமிருந்து முன்கூட்டியே பணத்தைப் பறிக்கும் பகற்கொள்ளை நடைமுறையாகும். அவசர தேவைக்குக்கூட வாகனங்களை கொண்டு செல்பவர்களிடமிருந்து இரு மடங்கு கொள்ளை அடிக்கும் விதிகளாகும்.
The post பாஸ்டேக் புதிய விதிகளுக்கு எஸ்டிபிஐ கடும் கண்டனம் appeared first on Dinakaran.