பாலிவுட்டில் பிரமாண்ட படம் இயக்கும் பா.ரஞ்சித்

1 week ago 4

சென்ன,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இவர் தற்போது 'வேட்டுவம்' என்ற புதிய படத்தை எழுதி இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்ததாக இந்திய கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்தியாவின் முதல் தலித் கிரிக்கெட் வீரர் என அறியப்படும் பல்வங்கர் பலூவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு ராமச்சந்திர குஹா எழுதிய 'எ கார்னெர் ஆப் எ பாரின் பீல்டு' (A CORNER OF A FOREIGN FIELD) புத்தகத்தை தழுவி படமாக எடுக்க தனக்கு அழைப்பு வந்துள்ளதாக நிகழ்ச்சி ஒன்றில் ரஞ்சித் தகவல் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இப்படம் பேச்சுவார்த்தை நிலையில் தற்போது உள்ளதாகவும், விரைவில் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகரும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Read Entire Article