பொள்ளாச்சி: தமிழ்நாட்டையே உலுக்கிய, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் நிர்வாகி உள்பட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை சிபிஐ கோர்ட் இன்று காலையில் தீர்ப்பளித்தது. இதனை வரவேற்கும் வகையில் திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகே நகர திமுக சார்பில் தீர்ப்பை வரவேற்று, பட்டா வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதில் பாலியல் குற்றவாளிகளின் உருவப்படத்தை கையில் ஏந்தியும், பொள்ளாச்சி அதிமுக முன்னாள் நகர மாணவரணி செயலாளராக இருந்தவரும், பாலியல் குற்றவாளிகளில் ஒருவரான அருளானந்தம், அதிமுக நிர்வாகிகளுடன் சேர்ந்திருந்த புகைப்படத்தையும் சுட்டிக்காட்டி, அதிமுகவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
திமுகவினர் கூறுகையில், 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்ற இந்த பாலியல் குற்றச்சம்பவத்தை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது திமுக என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்போது, பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டத்தால் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் என்றனர்.
The post பாலியல் வழக்கு தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து கொண்டாட்டம் appeared first on Dinakaran.