அணைக்கட்டு அருகே மரத்தில் பஸ் மோதி 22பேர் காயம்

3 hours ago 3

அணைக்கட்டு: வேலூரில் இருந்து ஒடுகத்தூருக்கு பயணிகளுடன் தனியார் பஸ் நேற்றிரவு சென்றது. இரவு 10.45 மணியளவில் அணைக்கட்டு அடுத்த கன்னிகாபுரத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் உள்ள மரத்தில் மோதியது. இதில் பெண்கள் உள்பட 22 பயணிகள் காயம் அடைந்தனர். விபத்து நடந்தவுடன் டிரைவர், கண்டக்டர் இருவரும் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அணைக்கட்டு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டனர்.

இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர், கண்டக்டரை தேடி வருகின்றனர். இதுதொடர்பாக கலெக்டர் சுப்புலட்சுமி இன்று கூறுகையில் பஸ் விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். 4 பேருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பஸ் டிரைவர், கண்டக்டர், உரிமையாளரிடம் விசாரணை நடத்த நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜன் கூறுகையில், விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி டிரைவர், கண்டக்டர் லைசென்ஸ் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post அணைக்கட்டு அருகே மரத்தில் பஸ் மோதி 22பேர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article