சென்னை,
மாணவர்கள் மீதான பாலியல் தாக்குதல்களை முற்றிலும் தடுக்க அதிகபட்ச நடவடிக்கை பரிந்துரைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், புதிய விதிகள் குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பான புகார்களில் சிக்குபவர்கள் சில நாட்கள் சஸ்பெண்ட் ஆகி ஜாமீன் பெற்று வெளியில் வந்துவிடுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறையில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் என 238 பேர் கொண்ட பட்டியலைத் தயார் செய்து, அவர்கள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க விசாரணை அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.