
புதுடெல்லி,
"சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி மற்றும் பாலியல் சார்ந்த பதிவுகள் எந்த கட்டுப்பாடும் இன்றி வெளியாகின்றன. ஓ.டி.டி. தளங்களிலும் படங்கள், தொடர்கள் செக்ஸ் தொடர்பான காட்சிகள் தணிக்கை செய்யப்படாமல் வெளியாகின்றன. எனவே, இதை தடை செய்ய வேண்டும், இதற்காக தேசிய உள்ளடக்கக் கட்டுப்பாட்டு ஆணையத்தை உருவாக்க வேண்டும்" என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த மனு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாஷி ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.