ஸ்பெயின், போர்ச்சுக்கலில் மின் தடை - மக்கள் கடும் அவதி

3 hours ago 3

மாட்ரிட்,

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் பெரும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டதாகவும், இதனால் மாட்ரிட்டில் உள்ள ஸ்பெயின் நாடாளுமன்றம் மற்றும் நாடு முழுவதும் உள்ள மெட்ரோ நிலையங்கள் இருளில் மூழ்கியது.

மாட்ரிட்டின் பராஜாஸ் சர்வதேச விமான நிலையம் மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அப்பகுதியில் உள்ள பல விமான நிலையங்கள் செயல்பாடுகளை நிறுத்திவிட்டன.

ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள சுரங்கப்பாதைகளில் ரெயில்கள் சிக்கிக் கொண்டதால், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் தலைநகரங்களில் உள்ள பெருநகரங்களில் பலர் சிக்கித் தவிக்கின்றனர். மெட்ரோ ரெயில் மூடப்பட்டு, நாடு முழுவதும் போக்குவரத்து சிக்னல்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல வாகனங்கள் செல்ல முடியாமல் பல கிலோ மீட்டர் தொலைவு வரை அணிவகுத்து நிக்கின்றனர்.

இந்த மின் தடை அன்டோரா மற்றும் ஸ்பெயினின் எல்லையை ஒட்டியுள்ள பிரான்சின் சில பகுதிகளிலும் வசிப்பவர்களை பாதித்ததாகக் கூறப்படுகிறது. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் ஏற்பட்ட பெரும் மின் தடைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மாட்ரிட்டில் பல கடைகள், உணவகங்கள் மற்றும் வணிகங்கள் முற்றிலுமாக இருளில் மூழ்கின. கூடுதலாக, இணைய சேவையும் பாதிக்கப்பட்டது.

இந்த மின் தடையால் அங்குள்ள மக்கள் பெரும் அளவு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த பெரிய மின் தடைக்குப் பிறகு மின்சாரத்தை மீட்டமைக்க ஆறு முதல் பத்து மணி நேரம் வரை ஆகலாம் என கூறப்படுகிறது.

Read Entire Article