பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ‘நிமிர்ந்து நில் துணிந்து சொல்’ லோகோ: கலெக்டர், எஸ்.பி. வெளியிட்டனர்

1 month ago 4

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவியர் சமீப காலமாக பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்களுக்கு மன உறுதி ஏற்படுத்தும் வகையில் ‘நிமிர்ந்து நில், துணிந்து செல்’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியின் தொடக்கம் ஆற்காடு குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் த.பிரபுசங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், பாலியல் துன்புறுத்தல் பாதிப்பு ஏற்படும்போது புகார் அளிக்க மாணவ, மாணவிகள் துணிந்து முன் வரவேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ள அனைவரும் குழந்தைகள்தான். அவர்கள் கல்வி கற்க முன்னுரிமை வழங்க வேண்டும். குழந்தை திருமணம் நடைபெறுவது தெரியவந்தால் அல்லது பாலியல் தொல்லை தொடர்பாக புகார் செய்ய குழந்தைகள் பாதுகாப்பு மையம் 1098 எண்ணிற்கும், அல்லது 98989 01098 என்ற கைபேசி எண்ணுற்கும் அழைத்தால், அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அறிவியல் அசுர சைபர் குற்ற செயல்கள் குறித்து தொடர்பான புகார் தெரிவிக்க 1930 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முன்னதாக ‘நிமிர்ந்து நில் துணிந்து சொல்’ லோகோவை கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோர் வெளியிட்டனர். மாணவர்கள் புகார் தெரிவிக்க எளிதாக அவர்களின் நோட்டு புத்தகங்களில் விழிப்புணர்வு முத்திரையை பதிவு செய்தனர். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி, வட்டாட்சியர் மலர்விழி, ஆற்காடு குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜூ உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ‘நிமிர்ந்து நில் துணிந்து சொல்’ லோகோ: கலெக்டர், எஸ்.பி. வெளியிட்டனர் appeared first on Dinakaran.

Read Entire Article