
சென்னை,
கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த 'விண்ணைதாண்டி வருவாயா' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. 'பானா காத்தாடி' படத்தின் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். அதனையடுத்து அவர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக அமைந்தன. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.
இதற்கிடையில், நடிகை சமந்தா இயக்குனர் பிவி நந்தினி ரெட்டி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இப்படத்தை சமந்தா தனது திரிலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார். இவரது தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தில் நடிக்கும் அனைவருக்கும் ஆண் பெண் பாலின பாகுபாடு இன்றி சம்பளம் வழங்க உள்ளார் சமந்தா. இது குறித்து இயக்குனர் நந்தினி ரெட்டி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
அதாவது, நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்த விஷயத்தை நடிகை சமந்தா ஒரு தயாரிப்பாளராக முன்னெடுத்துள்ளார். இது இந்திய சினிமாவில் யாரும் செய்யாத விஷயமாகும். இதனால் சமந்தாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.