
வாஷிங்டன்,
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரைச் சேர்ந்தவர் ஜோசப் (வயது 73). இவரது வீட்டில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வந்தனர். கடந்த 2023-ம் ஆண்டு அந்த குடும்பத்தைச் சேர்ந்த அல்பயோமி என்ற சிறுவன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது இனவெறியால் ஜோசப் அந்த சிறுவனை 26 முறை கத்தியால் குத்தினார். இதனை தடுக்க முயன்ற சிறுவனின் தாய்க்கும் கத்திக்குத்து விழுந்தது.
இதனையடுத்து ஜோசப்பை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதுதொடர்பான வழக்கு இல்லினாய்ஸ் மாகாண கோர்ட்டில் நடைபெற்றது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் 53 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.