ஆஸ்திரேலிய தொடரில் இந்திய பெண்கள் ஆக்கி அணியின் தோல்வி தொடருகிறது

5 hours ago 2

பெர்த்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய பெண்கள் ஆக்கி அணி, முதலில் அந்த நாட்டு 'ஏ' அணிக்கு எதிரான 2 ஆட்டங்களில் போராடி தோற்றது. தொடர்ந்து ஆஸ்திரேலியா சீனியர் அணிக்கு எதிராக 3 ஆட்டங்களில் விளையாடுகிறது.

இதன் முதலாவது ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் பணிந்த இந்தியா நேற்று மீண்டும் அந்த அணியை பெர்த்தில் சந்தித்தது. இந்த ஆட்டத்திலும் இந்தியாவுக்கு தோல்வியே மிஞ்சியது. ஆஸ்திரேலியா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிக்கனியை பறித்தது.

இந்திய அணியில் நவ்னீத் கவுர் (35-வது நிமிடம்), லால்ரெம்சியாமியும் (59-வது நிமிடம்), ஆஸ்திரேலிய அணியில் கிரேஸ் ஸ்டூவர்ட், ஜேட் சுமித், கிரேட்டா ஹேய்ஸ் ஆகியோரும் கோல் போட்டனர். இவ்விரு அணிகள் மோதும் கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது.

Read Entire Article