பரங்கிமலையில் மூடப்பட்ட ரெயில்வே சுரங்க வழியை திறந்து விட வேண்டும்- பயணிகள் கோரிக்கை

4 hours ago 2

சென்னை, பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு ரெயில் பயணிகள் வரும் சுரங்க நடைபாதை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. இதனால் மூத்த குடிமக்கள், நோயாளிகள் மேம்பாலத்தில் ஏறி அல்லது 200 மீட்டர் தொலைவில் உள்ள Escalator-ல் ஏற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சுரங்க வழியை ஆதம்பாக்கம் மேற்கு, வேளச்சேரி, மடுவின்கரை, வானுவம்பேட்டை, புழுதிவாக்கம் பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் பயன்படுத்தி வந்தனர். தற்போது மூடப்பட்ட சுரங்க வழியை 75 சதவீதம் பயணிகள் பயன்படுத்தி வந்தார்கள். தற்போது மூத்த குடிமக்கள், பெண்கள், லக்கேஜ் உடன் வரும் பயணிகள் பரங்கிமலை ரெயில் நிலையம் வருவதை தவிர்த்து சிரமப்படுகிறார்கள். தென்னக ரெயில்வே நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு பரங்கிமலையில் மூடப்பட்ட சுரங்க வழியை பயணிகளுக்கு திறந்து விட வேண்டும் என்று மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read Entire Article