சென்னை: கொட்டிவாக்கம் கிரிக்கெட் கிளப் நண்பர்கள் குழு சார்பில் கடந்த 3 நாட்களாக பாலவாக்கத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில், 31ம் ஆண்டு டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்று விளையாடின. இதற்கு நுழைவு கட்டணமாக ரூ.30 ஆயிரமும், முதல் பரிசாக ரூ.3 லட்சம் மற்றும் கோப்பையும், 2ம் பரிசாக ரூ.2 லட்சம் மற்றும் கோப்பையும் வழங்குவதாக கொட்டிவாக்கம் கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.
அதன்படி 3 நாட்கள் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசை பெங்களூருவை சேர்ந்த பி.கே.சி.சி அணி வென்றது. அந்த அணிக்கு, ரூ.3 லட்சம் ரொக்கமும், கோப்பையும் வழங்கப்பட்டது. 2ம் பரிசை வென்ற பெங்களூருவை சேர்ந்த நேஷ் பெங்களூரு அணிக்கு, ரூ.2 லட்சம் ரொக்கமும் கோப்பையும் வழங்கப்பட்டது. மேலும் மேன் ஆப் தி மேட்ச், பெஸ்ட் பிளேயர்,பெஸ்ட் கீப்பர் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு கோப்பை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காசா கிராண்ட் நிர்வாக இயக்குனர் எம்.என்.அருண், கொட்டிவாக்கம் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
The post பாலவாக்கத்தில் கிரிக்கெட் போட்டி; பெங்களூரு பிகேசிசி அணி கோப்பையை வென்றது appeared first on Dinakaran.