
பார்சிலோனா,
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரரான கரேன் கச்சனோவ், ஸ்பெயினை சேர்ந்த டேவிடோவிச் உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கச்சனோவ் 6-4 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.