
பார்சிலோனா,
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பலர் பங்கேற்று உள்ளனர். கடந்த 12-ந்தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தொடரின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் முன்னணி வீரர் கார்லஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் டிமினார் ஆகியோர் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் அல்காரஸ் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.