பார்க்கிங் பிரச்னையில் கத்தியை காட்டி மிரட்டிய வழக்கறிஞர் அதிரடி கைது: வீடியோ வைரல்

2 months ago 9

பெரம்பூர்: பெரம்பூர் ஜமாலியா, பெரம்பூர் நெடுஞ்சாலை முதல் தெருவில் வசிப்பவர் பாஸ்கர் (53). இவர் தனியார் பள்ளிகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து வருகிறார். சில நாட்களாக தனது வீட்டை மறுசீரமைப்பு செய்ய கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக, இடிபாடுகளை தனது வீட்டின் வெளியே கொட்டியுள்ளார். அந்த இடத்தில் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்ற வழக்கறிஞர் காரை நிறுத்துவது வழக்கம்.

இதுகுறித்து, ஏற்கனவே கிருஷ்ணகுமாருக்கும் பாஸ்கருக்கும் பிரச்னை இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் கிருஷ்ணகுமார் காரை நிறுத்த வந்தபோது அந்த இடத்தில் கட்டுமான கழிவுகள் கொட்டப்பட்டு இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார், பாஸ்கர் குடும்பத்தினரோடு சண்டை போட்டுள்ளார். அப்போது திடீரென கிருஷ்ணகுமார் காரில் இருந்து பெரிய கத்தியை எடுத்து, கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.

இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கத்தியுடன் கிருஷ்ணகுமார் தன்னை கொலை செய்ய வருவதாக பாஸ்கர் ஓட்டேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் வீடியோ ஆதாரத்தை வைத்து நேற்று காலை வழக்கறிஞர் கிருஷ்ணகுமாரை கைது செய்தார். மேலும் ஆக்ரோஷமாக கிருஷ்ணகுமார் கத்தியுடன் பாஸ்கரை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post பார்க்கிங் பிரச்னையில் கத்தியை காட்டி மிரட்டிய வழக்கறிஞர் அதிரடி கைது: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Read Entire Article