பார்க்கிங் தளங்களில் கூடுதல் கழிப்பறை, தண்ணீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை

12 hours ago 1

ஊட்டி : ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்களில் கூடுதல் கழிவறைகள், தண்ணீர் வசதிகளை ஏற்படுத்த சுற்றுலா ஆர்வலர்கள், பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை சீசனை முன்னிட்டு கடந்த 2 மாதங்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. ஊட்டி நகரில் போதிய பார்க்கிங் வசதிகள் இல்லாத நிலையில், ஆவீன், கால்ப் லிங்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் பார்க்கிங் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

இது தவிர என்.சி.எம்.எஸ்., பிரீக்ஸ் மற்றும் தனியார் பார்க்கிங் பகுதிகள் ஆகியவை உள்ளன. தற்போது சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகம் வரும் நிலையில், இந்த பார்க்கிங் தளங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. குறிப்பாக, ஊட்டி அருகே கால்ப் லிங்ஸ் சாலையில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் (பாஸ்கள்) நிறுத்தப்படுகிறது. ஒரு பஸ்சில் குறைந்தபட்சம் 50 பேர் வருகின்றனர். தற்போது நாள் தோறும் சுமார் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் வருகின்றன. ஆனால், இப்பகுதியில் தற்காலிக கழிப்பிடங்கள் (மொபைல் டாய்லெட்டுகள்) 2 மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.

இது போதுமானதாக இல்லை. அவசர தேவைகளுக்கு சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இப்பகுதியில் கூடுதல் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அதேபோல், ஆவின் வளாகத்திலும் கூடுதல் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அதேபோல், தண்ணீர் வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

எனவே, நகராட்சி நிர்வாகம் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் கூடுதல் கழிப்பிட வசதி மற்றும் தண்ணீர் வசதிகளை செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், ஊட்டி பெரும்பாலான கழிப்பிடங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் நலன் கருதி நகரில் அங்காங்கே மொபைல் டாய்லெட்டுக்களை ஏற்படுத்தி தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post பார்க்கிங் தளங்களில் கூடுதல் கழிப்பறை, தண்ணீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article