திருச்சி, ஜன.26: 2024 பாராளுமன்றத் தேர்தலில் தேர்தல் நடைமுறைகளை சிறப்பாக செயல்படுத்திய, திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாருக்கு, சென்னையில் நடந்த வாக்காளர் தினவிழாவில் ஆளுநர் ஆர்என்.ரவி சிறப்பு விருது வழங்கி கவுரவித்தாா். திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் கடந்த 2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, தேர்தல் தொடர்பான நடைமுறைகளை மிகச்சிறப்பாக செயல்படுத்தியமைக்காகவும், மாநில அளவில் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளுக்கும்,
திருச்சியை மையமாக வைத்து, அஞ்சல் வாக்கு சீட்டுகள் பரிமாற்ற வசதியை தேர்தல் ஆணையம் முதல் முறையாக மேற்கொள்ளும் போது, அதை சிறப்பாக செயல்படுத்தியமைக்காகவும், தலைமைத் தேர்தல் அலுவலகத்தால் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த தேசிய வாக்காளர் தினவிழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாருக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார்.
The post பாராளுமன்ற தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்த திருச்சி மாவட்ட கலெக்டருக்கு விருது appeared first on Dinakaran.