பாரதியார் பல்கலை.யில் தொலைதூர கல்விக்கு விண்ணப்பம் வரவேற்பு

1 day ago 2

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி முறையில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வருகிறது. தவிர, இணைய வழியிலும் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை தற்போது துவங்கியுள்ளது.

இதில், தொலைதூர கல்வி முறையில் எம்.காம், எம்.ஏ ஆங்கிலம், எம்.ஏ பொருளாதாரம், வரலாறு, எம்.எஸ்.டபுள்யு, எம்.சி.ஏ, எம்எஸ்இ இயற்பியல், கணினி அறிவியல், கணிதம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

ஆன்லைன் மூலம் இளநிலை படிப்பில் பி.ஏ ஆங்கிலம், பிபிஏ, பி.காம் ஆகிய 3 பட்டப்படிப்புகளும், முதுநிலையில் எம்.ஏ தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், எம்.காம் உள்பட 8 பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த பட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு, https://sde.b-u.ac.in என்ற இணையதளத்தை மாணவர்கள் அணுகலாம் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

The post பாரதியார் பல்கலை.யில் தொலைதூர கல்விக்கு விண்ணப்பம் வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article