சென்னை: பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் வாயிலாக “தமிழ் வெல்லும்” என்னும் தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதுபற்றிய விவரம்: பேச்சுப் போட்டி – தலைப்புகள்:தமிழ் எங்கள் உயிருக்கு நேர்,உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே,பாரடா உனது மானிடப் பரப்பை, எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் ஒரு கதை சொல்லட்டுமா குறித்து பதிவிட வேண்டும்.
வீடியோ அல்லது ஆடியோ வடிவில் அமைதல் வேண்டும். (3 நிமிடம்). கவிதைப் போட்டி- தலைப்புகள்: தமிழே! தமிழர் உயிரே,வரிப் புலியே தமிழ் காக்க எழுந்திரு,இனிமைத் தமிழ்மொழி எமது,தமிழும் நானும் என நான்கு தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் 1 பக்க அளவில் கவிதைகள் அமைதல் வேண்டும். கவிதைகளை எழுதி கோப்பாக அனுப்ப வேண்டும்.
கட்டுரைப் போட்டி- தலைப்புகள்:புதியதோர் உலகு செய்வோம்,துறைதோறும் தொண்டு செய்வாய், அறிவை விரிவு செய்,மாபெரும் தமிழ்க் கனவு என நான்கு தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் 3 பக்க அளவில் கட்டுரைகள் அமைதல் வேண்டும். கட்டுரைகளை எழுதி கோப்பாக அனுப்ப வேண்டும். ஓவியப் போட்டி- பாவேந்தரின் கவிதைகள், காவியங்கள், நாடகங்களைக் கருவாகக் கொண்டு ஓவியங்கள் அமைதல் வேண்டும்.ஓவியங்களை கோப்பாக அனுப்ப வேண்டும்.
ஒப்பித்தல் போட்டி- தலைப்பு: பாவேந்தரின் ‘தமிழியக்கம் நூலிலிருந்து 1(கரும்பு தந்த தீஞ்சாறே), 3 (ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின்) பாடல்களைப் பரிந்துரைக்கலாம்.குறித்து பதிவிட வேண்டும். வீடியோ அல்லது ஆடியோ வடிவில் அமைதல் வேண்டும். (3 நிமிடம்).போட்டியில் கலந்து கொள்பவர்கள் [email protected] < mailto: [email protected] > என்ற மின்னஞ்சல் மற்றும் கீழ்கண்ட விரைவு துலங்கள் குறியீடு (QR code) வாயிலாகவும் படைப்புகளை மே- 31 ந் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
The post பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு போட்டிகள் appeared first on Dinakaran.