திருவள்ளூர்: திருவள்ளூர் பாரதிதாசன் நிறைநிலைப் பள்ளியில் மழலையர்களுக்கான மாறுவேட போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் மோ.தி.உமா சங்கர் தலைமை தாங்கினார். கல்வி ஒருங்கிணைப்பாளர் சுந்தர், தலைமை ஆசிரியர்கள் ஜோ.மேரி, குமரீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மழலையர் பள்ளி பொறுப்பாசிரியர்கள் ஆர்த்தி, சி.காவேரி ஆகியோர் வரவேற்றனர். அப்போது குழந்தைகள் பல்வேறு ஒப்பனைகளில் வேடமிட்டு தங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தினர். ஆசிரியர்கள், ஏராளமான பெற்றோர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். இவ்விழாவினை கண்டுகளித்த பெற்றோர்கள் பள்ளியின் நிர்வாகத் திறனை பாராட்டினர்.
The post பாரதிதாசன் பள்ளியில் மாறுவேட போட்டி appeared first on Dinakaran.