பாம் சரவணனின் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை..!!

3 hours ago 1

சென்னை: போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தரக்கோரிய வழக்கில் பாம் சரவணனின் மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் துப்பாக்கியால் சுட்டத்தில் காயமடைந்த பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தரக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இடது காலில் குண்டு அகற்றப்பட்ட பின்னரும் ரத்தக்கசிவு உள்ளதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தர கோரிக்கை விடுத்த நிலையில், வழக்கு விசாரணையை ஜன.27ம் தேதிக்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது.

The post பாம் சரவணனின் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.

Read Entire Article