சென்னை: பாமக தலைவர் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் வழங்கினோம். மாநிலங்களவை சீட் வழங்கிய அதிமுகவை மறந்துவிட்டு, பாஜகவுக்கு தாவினார் அன்புமணி என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். “கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமிதான் முடிவு எடுப்பார். அதிமுக, திமுக என்ற பெரும் கட்சிகளின் தலைமையைத்தான் மக்கள் விரும்புவார்கள். நாளைக்கு உயிரை விடப் போகிறோமென்று இன்று போய் சுடுகாட்டில் படுக்க முடியுமா?” என மதுரையில் செல்லூர் ராஜு பேட்டியளித்துள்ளார்.
The post பாமக தலைவர் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் வழங்கினோம்: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு appeared first on Dinakaran.