டிப்ளோஸ் மேக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

3 hours ago 1

நியூமரஸ் மோட்டார்ஸ், டிப்ளோஸ் மேக்ஸ் என்ற எலக்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் டூயல் டிஸ்க் பிரேக்குகள், எல்இடி லைட்டுகள், பார்க்கிங்கில் வாகனம் இருக்கும் இடத்தை கண்டறிதல், திருட்டு தடுப்பு அலாரம் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஸ்கூட்டர் 1.39 கோடி கிலோ மீட்டருக்கு சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த அளவுக்கு வேறு எந்த நிறுவனமும் சோதனை ஓட்டம் நடத்தியதில்லை என நியூமரஸ் மோட்டார் தெரிவித்துள்ளது. இதில் 3.7 கிலோவாட் அவர் டிவின் பேட்டரி பேக் இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 140 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் வரை ஆகும். தற்போது 14 நகரங்களில் நியூமரஸ் மோட்டார்ஸ் டீலர்கள் உள்ளனர் எனவும், வரும் நிதியாண்டுக்குள் இது 170 ஆக உயரும் எனவும் இநு்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஷோரூம் விலை சுமார் ரூ.1.12 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post டிப்ளோஸ் மேக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் appeared first on Dinakaran.

Read Entire Article