கும்பகோணம், அக்.19: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவத்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமிற்கு பள்ளி தலைமையாசிரியை நீலாதேவி தலைமை வகித்தார். முகாமில் குடும்ப நல சுகாதாரத்துறை துணை இயக்குனர் அன்பழகன், கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட புள்ளியியல் உதவியாளர் செல்வம், பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) உஷா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு வளர் இளம் பருவத்தினர் கருவுருதலை தடுத்தல் குறித்து விழிப்புணர்வு கருத்துகளை வழங்கினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பாபநாசம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள், சுகாதாரத்துறை, காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post பாபநாசம் அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.