பான்மசாலா விற்ற மளிகை கடைக்கு சீல்

3 weeks ago 4

தர்மபுரி, அக்.26: தர்மபுரி அருகே, கிருஷ்ணாபுரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட பான்மசாலா விற்பனை செய்த மளிகை கடையை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். தர்மபுரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம், அரியகுளம், நாயக்கன்கொட்டாய், நடுப்பட்டி, சீராம்பட்டி, மோட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள மளிகை கடைகள் மற்றும் பெட்டிக்கடை என 40க்கும் மேற்பட்ட கடைகளில், உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் மற்றும் கிருஷ்ணாபுரம் எஸ்எஸ்ஐ ராஜூ ஆகியோர் திடீர் சோதனை செய்தனர். இந்த சோதனையில் ஒரு மளிகை கடையில் ₹1000 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அந்த கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் கடையின் உரிமையாளருக்கு ₹25 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.

The post பான்மசாலா விற்ற மளிகை கடைக்கு சீல் appeared first on Dinakaran.

Read Entire Article