'பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட அ.தி.மு.க.வினர் செல்லவில்லை' - அமைச்சர் சேகர் பாபு

3 months ago 21

சென்னை,

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எங்காவது ஒரு இடத்தில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொண்டாரா? என அமைச்சர் சேகர் பாபு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அனைவரும் விளையாட்டுப் பிள்ளை என்றே நினைத்தார்கள். ஆனால், களத்தில் யார் எதிர்த்து நின்றாலும் வெற்றி தனக்கே சொந்தம் என்பதுபோல் இன்று தமிழக அரசியல் களத்தில் உதயநிதி ஸ்டாலின் உலாவிக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, எங்காவது ஒரு இடத்தில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொண்டாரா? சென்னையில் அ.தி.மு.வைச் சேர்ந்த பல முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் இருக்கிறார்கள். இருப்பினும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட அ.தி.மு.க.வினர் எங்கும் செல்லவில்லை."

இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

Read Entire Article