அசாமில் ரூ.3 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

4 hours ago 1

திஸ்பூர்,

அசாம் போலீசாருக்கு போதைப்பொருள் கடத்தல் குறித்த ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கோக்ரஜார் மற்றும் கோலாகாட் மாவட்டங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான 3 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 3 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை போலீசார் கண்டுபிடித்தனர். இதில் 512.58 கிராம் ஹெராயினும், 967.9 கிலோ கஞ்சாவும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article