மேடையில் கண் கலங்கிய உதவியாளர்....சமந்தா செய்த செயல் - வீடியோ வைரல்

4 hours ago 1

சென்னை,

'சுபம்' படத்தின் வெற்றி விழாவில் மேடையில் உணர்ச்சிவசப்பட்ட உதவியாளருக்கு சமந்தா ஆறுதல் கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது பேச்சாலும், செயலாலும் இணையத்தில் அடிக்கடி மக்களின் இதயங்களை வெல்வார் நடிகை சமந்தா. அந்த வகையில், தான் தயாரித்த 'சுபம்' படத்தின் வெற்றி விழாவில் மீண்டும் மக்களின் இதயங்களை வென்றிருக்கிறார்.

'சுபம்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாக இருப்பவர் சமந்தா. கடந்த 9-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து இப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. அப்போது நடிகை சமந்தாவின் உதவியாளர் ஆர்யன் மேடையிலேயே கண் கலங்கி உணர்ச்சிவசப்பட்டார்.

உடனடியாக நடிகை சமந்தா அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினார். சமந்தாவின் இந்த செயல் இணையத்தில் ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது.

Read Entire Article