சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் மன வேதனையில் உள்ளனர்.
தஞ்சை, மயிலாடுதுறையில் மீண்டும் மழை சேதத்தால் 22 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் முற்றிலும் அழிந்து, விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே இந்த அரசு உடனடியாக விவசாயிகளின் கஷ்டத்தையும், வேதனையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்.
The post பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு உரிய நிவாரணம்: பிரேமலதா வலியுறுத்தல் appeared first on Dinakaran.