"பாட்டல் ராதா" படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு

2 hours ago 1

சென்னை,

இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ள திரைப்படம் 'பாட்டல் ராதா'. இந்த படத்தை பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி வைரலாகின. இப்படம் கடந்த 24-ந் தேதி வெளியானது. தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள 'பாட்டல் ராதா' படத்தை திரையுலகினர் பாராட்டி வருகின்றனர். இப்படம் மதுவால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்தும் படமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் 'பாட்டல் ராதா' படத்தின் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Read Entire Article