சென்னை: பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா ஆஜரானார். மியூசிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அதில் 1997ஆம் ஆண்டு இளையராஜா அவரது மனைவி பெயரில் இசை நிறுவனத்திற்கு ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும் அந்த ஒப்பந்தத்தின்படி தேவர்மகன், பாண்டியன், பிரம்மா, குணா உள்ளிட்ட 109 படங்களின் இசைவெளியீட்டு உரிமையை தனது நிறுவனம் பெற்றுள்ளதாகவும் ஆனால் தன்னுடைய அனுமதி இல்லாமல் அந்த பாடல்களை தற்போது யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் எனவே தன்னுடைய அனுமதி பெற்றுத்தான் பயன்படுத்த வேண்டும் இதற்கு அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கில் பிரதிவாதிகளாக இளையராஜாவின் இசை நிறுவனம் மற்றும் இளையராஜா ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் அப்துல் குதூர் முன் நடைபெற்ற ஒப்பந்தம் மேற்கொண்ட போது யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்கள் பற்றி குறிப்பிடவில்லை என்றும் ஆடியோ ரீலீஸ் ஒப்பந்தம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இளையராஜா தற்போது வழக்கறிஞர்களுடன் நேரில் ஆஜராகி உள்ளார். அந்த சாட்சியம் என்பது எந்தெந்த ஆவணங்கள் அடிப்படையில் வழக்கை தாங்கள் எதிர்தரப்பாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த ஆவணங்களை தாக்கல் செய்து அது தொடர்பான சாட்சியத்தை அளித்துள்ளார்.
The post பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜா மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்..!! appeared first on Dinakaran.