பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு: நடிகர் கமல் இரங்கல்

4 months ago 16

சென்னை,

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் (80) உடல்நலக்குறைவால் கேரளாவின் திருச்சூரில் நேற்று காலமானார். தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 15,000க்கும் மேற்பட்ட பாடல்களை ஜெயச்சந்திரன் பாடியுள்ளார். இவர் இந்திய தேசிய திரைப்பட விருதை ஒருமுறையும், தமிழக அரசின் மாநில திரைப்பட விருதை இரண்டு முறையும், கேரள மாநில திரைப்பட விருதை ஐந்து முறையும் பெற்றுள்ளார். 1997ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். தமிழில் புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள், சம்சாரம் அது மின்சாரம், அம்மன் கோவில் கிழக்காலே, கிழக்குச் சீமையிலே, பூவே உனக்காக, சுந்தரா டிராவல்ஸ், கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் மறைவிற்கு நடிகர் கமல் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மலையாளத்திலிருந்து வந்து தெற்கு மாநிலங்களை நிரப்பிய மணிக்குரலுக்கு சொந்தக்காரரான ஜெயச்சந்திரன் மறைந்துவிட்டார் எனும் செய்தி மனதை வருத்துகிறது. அவர் பாடிய பாடல்களில் எல்லாம் வெற்றி கண்டு காட்டியவர். அவர் இசையாக என்றும் நம் மனங்களில் இருப்பார். அவருக்கு என் அஞ்சலி" என்று குறிப்பிட்டுள்ளார்.

மலையாளத்திலிருந்து வந்து தெற்கு மாநிலங்களை நிரப்பிய மணிக்குரலுக்குச் சொந்தக்காரரான ஜெயச்சந்திரன் மறைந்து விட்டார் என்னும் செய்தி மனதை வருத்துகிறது. பாடிய பாடல்களில் எல்லாம் வெற்றிகண்டு காட்டியவர். இசையாக என்றும் நம் மனங்களில் இருப்பார். அவருக்கு என் அஞ்சலி.

— Kamal Haasan (@ikamalhaasan) January 9, 2025

பாடகர் ஜெயசந்திரனின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த வைரமுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து கவிதை வெளியிட்டுள்ளார்.

பாடகர் ஜெயச்சந்திரன்

காலமானார் என்ற செய்தியால்

கண்கள் நீர்கட்டின

'கொடியிலே மல்லிகைப்பூ'

மறக்க முடியுமா?

'தெய்வம் தந்த பூவே'

காற்றில் கரையுமா?

'என்மேல்விழுந்த

மழைத்துளியே'

மண்ணில் மறைந்துபோகுமா?

எத்துணை எத்துணை பாடல்கள்

அத்துணையும் முத்துக்கள்

பழக இனியவர்;

பண்பாளர்

அவரை நான்

ஏழைகளின் ஜேசுதாஸ்

என்பேன்

அவர்

உடல் மறைந்தாலும்

குரல் மறையாது

'இன்று எழுதிய என்கவியே

இனிமேல் உன்னை

எவர் இசைப்பார்'

கனத்த மனத்தோடு

அஞ்சலியும்

ஆழ்ந்த இரங்கலும்

என பதிவுட்டுள்ளார்.

பாடகர் ஜெயச்சந்திரன்காலமானார் என்ற செய்தியால்கண்கள் நீர்கட்டின'கொடியிலே மல்லிகைப்பூ'மறக்க முடியுமா?'தெய்வம் தந்த பூவே'காற்றில் கரையுமா?'என்மேல்விழுந்தமழைத்துளியே'மண்ணில் மறைந்துபோகுமா?எத்துணை எத்துணை பாடல்கள்அத்துணையும் முத்துக்கள்பழக இனியவர்;பண்பாளர்அவரை நான்… pic.twitter.com/VwVECMXpdb

— வைரமுத்து (@Vairamuthu) January 9, 2025
Read Entire Article