பாஜவுடன் அதிமுக கள்ளக்கூட்டணி: அமைச்சர் நாசர் கடும் கண்டனம்

2 months ago 10

சென்னை: தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வெளியிட்ட அறிக்கை: விஸ்வ ஹிந்து பரிஷத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களை அவதூறாக பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமாரை பணிநீக்கம் செய்யக்கோரும் தீர்மானத்திற்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர்களான என்.ஆர்.இளங்கோ, கிரிராஜன், வில்சன், அப்துல்லா ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர்.

ஆனால் அதிமுகவை சேர்ந்த 4 மாநிலங்களவை உறுப்பினர் இருந்தும் ஒருவர் கூட இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக நின்று அந்த தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திடவில்லை. எனவே அடிமை அதிமுகவோ ஒருபக்கம் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம் என கூறி மக்களை ஏமாற்றிக்கொண்டு மறுபக்கம் பாஜகவின் கள்ள உறவை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

The post பாஜவுடன் அதிமுக கள்ளக்கூட்டணி: அமைச்சர் நாசர் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article