பாஜவின் மிகப்பெரிய சொத்து அண்ணாமலையை யாரும் வெளியேற்ற முடியாது: தலைவர் பதவியை கைப்பற்றிய நயினார் நாகேந்திரன் பேட்டி

1 month ago 4

சென்னை: அண்ணாமலையை யாரும் வெளியேற்ற முடியாது. அண்ணாமலை பாஜவின் மிகப்பெரிய சொத்து. பாஜ, அதிமுக கூட்டணி குறித்து அமித்ஷா பேசி முடித்து விட்டு சென்று இருக்கிறார். இனிமேல் தேர்தல் வேலையில் ஈடுபடும்போது, அதற்கான காரண காரியங்களுடன் செயல்படுவோம் என புதிய பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். தமிழ்நாடு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மாலை தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது, அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

அண்ணாமலையை யாரும் வெளியேற்ற முடியாது. அவர் பாஜவின் மிகப்பெரிய சொத்து. அரசியலில் பல காலமாக பல விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அரசியல் கட்சிகள் கூட்டணிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. அது எப்படியும் இருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில், அரசியல் நாகரிகமான முறையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணி குறித்து, இபிஎஸ்சிடம் பேசி விட்டு, நேரடியாக அவருடைய வீட்டிற்கு, டின்னருக்கு சென்றார்.

அங்கு சாப்பிட்டுவிட்டு, பின்புதான் அவர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அந்த நிகழ்ச்சியில் நான், கே.பி.முனுசாமி, வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டோம். அப்போது அமித்ஷா, அன்று பேசி முடித்துவிட்டு சென்றிருக்கிறார். அதை தொடர்ந்து தேர்தல் வேலைகளில் ஈடுபடும்போது, அதற்கான காரண காரியங்களோடு செயல்படுவோம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

* டின்னர் வீட்டை மாற்றிய நயினார்
நயினார் நாகேந்திரன் தனது பேட்டியின் போது, முன்னாள் முதல்வர் இபிஎஸ் வீட்டிற்கு டின்னருக்கு சென்றோம் என்று கூறுவதற்கு பதிலாக, ஓபிஎஸ் வீட்டிற்கு காலையில் சென்றோம் என்று மாற்றிக் கூறினார். அதன்பின்பு அவரே அதை மாற்றி, இபிஎஸ் வீட்டிற்கு மாலை டின்னருக்கு சென்றோம் என்று திருத்தியபடி கூறினார்.

The post பாஜவின் மிகப்பெரிய சொத்து அண்ணாமலையை யாரும் வெளியேற்ற முடியாது: தலைவர் பதவியை கைப்பற்றிய நயினார் நாகேந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article