வண்டலூர் அருகே பேருந்தில் ஏற முயன்ற முதியவரை தாக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துர்

3 hours ago 1

சென்னை: சென்னை வண்டலூர் அருகே பேருந்தில் ஏறிய முதியவருக்கும் நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அந்த முதியவரை ஓட்டுநரும் நடத்துநரும் தாக்கிய காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை மாநகர பேருந்து ஒன்று வண்டலூர் பேருந்து நிலையத்திற்கு வந்தது. அப்போது அங்கு பாஸ் எடுத்திருந்த மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் அந்த பேருந்தில் ஏறினார். அப்போது அவர் மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கையில் அமர்ந்தார். இதற்கு நடத்துநர் எதிர்ப்பு தெரிவித்து ஒருமையில் அந்த முதியவரை பேசி வேறு இருக்கையில் அமருமாறு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கு முதியவர், தன் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை கூறினார். அப்போது நடத்துநர், அந்த முதியவரை ஆபாசமான வார்த்தைகளில் பேசியதாக சொல்லப்படுகிறது. இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. உடனே அந்த முதியவரின் முடியை பிடித்து இழுத்த நடத்துநர் அவரை வெளியே தள்ளிவிட்டார். அத்துடன் இறங்கி போய் முதியவரை தாக்கினார், பதிலுக்கு முதியவரும் கடுமையாக போராடினார்.

உடனே டிரைவரும் இறங்கி வந்து அந்த முதியவரை தாக்கினார். முதியவரை தாக்கி வலுக்கட்டாயமாக பேருந்திலிருந்து இறக்கிவிட்டுச் ஓட்டுநர், நடத்துநர் சென்றனர். இதையடுத்து அந்த பேருந்தில் பயணம் செய்த சிலர் வந்து தடுத்து நிறுத்தினர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் நடத்துநரும் ஓட்டுநரும் Name badge அணியவில்லை என பயணிகள் புகார் தெரிவிக்கிறார்கள்.

 

 

 

The post வண்டலூர் அருகே பேருந்தில் ஏற முயன்ற முதியவரை தாக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துர் appeared first on Dinakaran.

Read Entire Article